உயர்தரப் பரீட்சை நாளைமுதல் மீண்டும் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம்!

Tuesday, December 3rd, 2024

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளைமுதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், கனமழை காரணமாக 27ஆம் திகதிமுதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அதன்படி நாளை முதல் மீண்டும் பரீட்சை ஆரம்பிக்கப்படும் எனவும், நாளைய தினம் இடம்பெறவுள்ள பாடங்களின் படி பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை நடைபெறாத நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி நிறுத்தம் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர் விளக்கம்!
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இலங்கையும் இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் - இந்தியப்...
இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமான நாடாகவே இருக்கும் - சலுகைக் கடன் வசதியைப் பெறுவதற்காக தற்காலிக முட...