இந்தியா சாதனை – 100 ஆவது ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ!
Wednesday, January 29th, 2025
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100 ஆவது ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.
ஜிஎஸ்எல்வி-எப் 15 எனப் பெயரிடப்பட்டுள்ள ரொக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ரொக்கெட் மூலம் என்.வி.எஸ்- 02 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் இன்று காலை 6.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது.
என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் தரை,கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியமான தகவலை தெரிவிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எல்லையில் தடுப்புச் சுவர் கட்டியே தீருவேன்- டொனால்ட் ட்ரம்ப்!
அரசியல் சாசன நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பணிந்த தென்னாபிரிக்க அதிபர் ஸூமா!
மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு - இராணுவத் தளபதி அறிவிப்பு!
|
|
|


