எல்லையில் தடுப்புச் சுவர் கட்டியே தீருவேன்- டொனால்ட் ட்ரம்ப்!

Friday, September 2nd, 2016

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் குடியேறும் சட்டவிரோத குடியேறிகளைத் தடுக்கும் நோக்கத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் மிகப்பெரிய தடுப்புச் சுவர் ஒன்றைக்கட்டுவதில் தான் உறுதியாக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

தான் அமெரிக்க அதிபரானால் அந்த பிரம்மாண்ட சுவரை கட்டாயம் கட்டுவேன் என்றும் அதற்காகும் செலவை மெக்ஸிகோவிடமிருந்து வாங்குவேன் என்றும் அவர் தொடர்ந்து கூறிவருகிறார்.

நேற்றுமுன்தினம் (31-08-2016) புதன் கிழமை மெக்சிகோவுக்கு சென்று திரும்பிய பின்னர் அமெரிக்காவில் அவர் ஆற்றிய ஒரு மணி நேர உரையில் இந்த சுவர் கட்டுவது தொடர்பான தனது முந்தைய நிலைப்பாட்டில் தான் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாக வலியுறுத்தினார்.

மெக்ஸிகோ அதிபரிடம் இந்த சுவர் குறித்து தான் பேசியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறினார். ஆனால் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான செலவை மெக்ஸிகோ ஏற்காது என்று பேச்சுவார்த்தையின் துவக்கத்திலேயே தாம் தெரிவித்துவிட்டதாக மெக்ஸிகோ அதிபர் தமது டுவிட்டரில் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

Untitled-2 copy

Related posts: