திடீரென ஒத்திவைக்கப்பட்ட சசிகலாவின் பதவியேற்பு: பெரும் குழப்பத்தில் மன்னார்குடி தரப்பு!

Tuesday, February 7th, 2017

தமிழக முதலமைச்சராக அ.தி.மு.க கட்சியின் பொது செயலாளரான சசிக்கலா நாளை பதவியேற்றபார் என எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில், பதவியேற்பு நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் தமிழக விஜயம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பதவியேற்பு நிகழ்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றை தினம் இடம்பெற்ற அ.தி.மு.க கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளரான சசிக்கலா முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்வரும் 9ஆம் திகதிக்குள் சசிக்கலா முதலமைச்சராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தமிழக அரசியல் சூழலில் பரபரப்பு நிலவி வருகிறதையடுத்து நாளைய தினமே சசிகலா பதவியேற்க உள்ளதாக கூறப்பட்டது.

இதற்காக, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும், தற்போது பதவியேற்பு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்பது குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்ட ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதி மன்றத்தில் தாக்கதல் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான வழக்கின் தீர்ப்பும் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சசிக்கலா முதலமைச்சராக பதவியேற்பதில் பிரச்சினை உருவாகலாம் என ஆளுநர் கருதுவதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டதையடுத்து மன்னார்குடி தரப்பு பெரும் குழப்பத்தில் இருப்பதாகவும் தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sasikala4-600-05-1480943735

Related posts: