உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக மீண்டும் ஏஞ்சலா மெர்கல்!

Tuesday, June 7th, 2016

உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணீயாக தொடர்ந்து ஆறாவது முறையாக தெரிவாகியுள்ளார் ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்கல்.

அமெரிக்க பத்திரிகையான ஃபோர்ப்ஸ் 11வது முறையாக உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் இவருக்கு முதலிடத்தை வழங்கி கவுரவித்து வருகிறது.

மட்டுமின்றி கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி 6 முறை இந்த பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார் ஏஞ்சலா மெர்கல்.

இந்த பட்டியலில் முதன் முறையாக இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து அரசியல்வாதியான நிக்கோலா ஸ்டர்ஜியன் 50-வது இடத்தில் உள்ளார்.

ஏஞ்சலா மெர்கலுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாக வாய்ப்புகள் உள்ள ஹிலாரி கிளிண்டன் உள்ளார். மூன்றாவது இடத்தில் இருப்பவர் அமெரிக்க மத்திய வங்கிகளுக்கான முதன்மை அதிகாரியாக பணியாற்றிவரும் ஜேனட் யெல்லென்.

4வது மற்றும் 5வது இடங்களில் மெலிண்டா கேட்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டோர் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான மேரி பர்ரா ஆகியோர் உள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மீச்செல் 13வது இடத்திலும், பிரித்தானிய மகாராணியார் 29வது இடத்திலும் உள்ளனர். ராணி எலிசபெத் கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் 49வது இடத்தில் இருந்தார்.

2016 ஆம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகள் 100 பேரை தெரிவு செய்துள்ள ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் 51 பேர் அமெரிக்கர்கள், வெறும் 6 பேர் மட்டுமே பிரித்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: