கலெக்டர் ஆனார் பி.வி. சிந்து!

Saturday, February 25th, 2017

இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவிசிந்து துணை ஆட்சியர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

சிந்துவின் தாய் விஜயா இத்தகவலை உறுதி செய்துள்ளார். தற்போது, 21 வயதான சிந்து மத்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றிவருகிறார்.

பி.வி.சிந்து கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நகரின் முக்கிய இடத்தில் 1000 சதுர அடி நிலம் வழங்கியுள்ளார். அதோடு அவருக்கு துணை ஆட்சியர் பதவி வழங்குவதாக அறிவித்தார். தற்போது அதை பி.வி. சிந்து ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நெவால் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் மட்டும் பேட்மிண்டனில் பதக்கம் வென்று அசத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

201609230933211030_Srikalahasti-temple-badminton-player-PV-Sindhu-darshan_SECVPF

Related posts: