நாடுகடத்தும் மசோதா மீளப் பெறப்பட்டது!

Friday, September 6th, 2019


கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அந்த மசோதா தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் குற்றவியல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

குறித்த சட்ட திருத்த மசோதாவை முழுமையாக இரத்து செய்ய வேண்டும். போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: