பாடசாலை மாணவர்களுக்காக தடை செய்யப்படும் நிறுவனங்கள் – பிரித்தானிய பிரதமர் அதிரடி நடவடிக்கை!

Friday, June 2nd, 2023

பிரித்தானியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட்டுகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இ-சிகரெட் விற்பனை செய்வது சட்டவிரோத செயலாகும். ஆனால் வணிகத்துக்காக குழந்தைகள் குறிவைக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாதிரி என்ற பெயரில் காரீயம் கலந்த இ-சிகரெட்டுகள் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட் கிடைக்கும் வகையில் இயங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நிகோடின் இல்லாத புகையிலைகளை விற்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கு தடை விதிப்பது குறித்தும் அரசு மறுஆய்வு செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: