தடை செய்யப்பட்ட  இரசாயனம் பயன்படுத்தி படுகொலை: மலேசிய அரசு கண்டனம்  அறிக்கை!

Saturday, March 4th, 2017

மலேசியாவில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரரான தந்தையின் சகோதரர் மகன்) கிம் ஜாங் நாம் மலேசிய விமான நிலையத்தில் கொள்வதற்காக உலக நாடுகளால் தடை செய்யப்பட்டநச்சு இரசாயனம் பயன்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு மலேசிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரரான (தந்தையின் சகோதரர் மகன்) கிம் ஜாங் நாம் மலேசிய விமான நிலையத்தில் கடந்த 6-2-2017 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக இரு பெண்கள் மற்றும் வட கொரியாவை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கூலிப்படை மூலம் கிம் ஜாங் நாம்-ஐ தீர்த்து கட்ட வட கொரியாவை சேர்ந்த சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது.

அவரை கொல்வதற்காக உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ‘VX’ எனப்படும் கொடிய நச்சு ரசாயனம் பயன்படுத்தப்பட்டது பிரேத பரிசோதனையின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்நிலையில், பயங்கரமான ரசாயனத்தை இந்த படுகொலைக்கு பயன்படுத்தி இருப்பதை மலேசிய அரசு கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக, மலேசிய அரசு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘எவ்விதமான நோக்கத்திலும், எந்த சூழ்நிலையிலும் மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடங்களில் இதைப்போன்ற அபாயகரமான நச்சு ரசாயனத்தை பயன்படுத்தப்படுவதை இந்த அரசு வன்மையாக கண்டிக்கிறது.

இதைப்போன்ற ஆபத்தான ரசாயனங்களை மலேசியா தயாரிப்பது கிடையாது. இறக்குமதி செய்து நாங்கள் சேமித்து வைப்பதும் இல்லை. நெதர்லாந்தில் இருக்கும் ரசாயன ஆயுதங்கள் மீதான தடையை கண்காணித்து வரும் அமைப்பிடம் இது, தொடர்பாக ஆண்டுதோறும் முறையான அறிக்கையை மலேசிய அரசு தாக்கல் செய்து வருகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

A58A36C2-A911-4FA5-9650-82AD66F7B678_L_styvpf

Related posts: