தென் கொரிய கொடியேற்றப்பட்ட பாரிய கப்பலை கைப்பற்றியது ஈரான்!

Tuesday, January 5th, 2021

ஈரானின் புரட்சிகர காவல்படை வளைகுடா கடற்பரப்பில் தென் கொரிய நாட்டின் கொடியேற்றப்பட்ட ஒரு கப்பலை கைப்பற்றியுள்ளதுடன், அதன் குழுவினரை தடுத்து வைத்துள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி பயணித்தபோதே தென்கிழக்கில் ஓமான் குடாவையும், தென்மேற்கில் பாரசீகக் குடாவையும் கொண்ட ஹோர்முஸ் நீரிணையில் வைத்து இந்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க பொருளாதாரத் தடைகள் காரணமாக தென் கொரிய வங்கிகளில் முடக்கப்பட்ட ஈரானிய நிதி தொடர்பாக தெஹ்ரானுக்கும் சியோலுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு இடையே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஓமானுக்கு வெளியே உள்ள கடற்பரப்பில் ஈரானிய அதிகாரிகள் தென் கொரிய இரசாயன கப்பலை பறிமுதல் செய்ததை சியோல் உறுதிசெய்துள்ளதுடன், அதை உடனடியாக விடுவிக்கும்படியும் கோரியுள்ளது.
வளைகுடாவை இரசாயனங்கள் மாசுபடுத்தியதற்காக குறித்த கப்பலைக் கைப்பற்றியதாக அரசு தொலைக்காட்சி உட்பட பல ஈரானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறையும் உடனடியாக கப்பலை விடுவிக்குமாறு ஈரானிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: