அகதிகள் படகு விபத்து : லிபியாவில் 50 பேர் பலி!

Saturday, September 23rd, 2017

அகதிகள் படகு ஒன்று கடலில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாக லிபியா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு போர் நடைபெறும் நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வெளியேறி பலர் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர். அவ்வாறு வருபவர்களின் படகுகள் கடலில் மூழ்கி விபத்துக்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு ஷுவாரா நகர கடல் பகுதியில் அகதிகள் படகு சென்றபோதே கடலில் படகு மூழ்கியுள்ளதுடன் அதில் பயணம் செய்த 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  35 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவன நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.இந்த ஆண்டு மட்டும் மத்திய தரைக் கடல் வழியாக 1 லட்சம் அகதிகள் இத்தாலி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளதுடன், 2,400-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

புதிய நாடாளுமன்ற கூட்டத்தின்போது புதிய அரசின் கொள்கை அறிக்கையை அறிவிப்பார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!
நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் வலுவிழந்து செல்ல மேலும் இரண்டு வருடங்கள் ஆகலாம் - சுகாதார ...
பாண் விலை அதிகரிப்பு தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை - அகில இலங்கை ...