மன்னிப்புக் கோரினார்  மார்க்!

Friday, April 13th, 2018

கேம்பிரிட்ஜ் அனலிடிகாடு விவகாரம் தொடர்பாக, டுபேஸ்புக்டு நிறுவனர் மார்க் சக்கர்பர்க், அமெரிக்க பாராளுமன்றில் கடந்த செவ்வாய்கிழமை மன்னிப்பு கோரினார்.

கடந்த, 2016 இல் நடந்த, அமெரிக்க அதிபர் தேர்தலில், அந்நாட்டை சேர்ந்த 8.7 கோடி பேர் பேஸ்புக் எனப்படும் சமூக வலைதள பக்கங்களில் அளித்த தனித் தகவல்கள் தவறாக பயன்படுத்தப் பட்டதாகவும், அதனால் தேர்தல் முடிவில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் முறைப்பாடுகள் எழுந்தன.

இந்த ஊழலின் பின்னணியில், பிரிட்டனை சேர்ந்த, கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்கா மட்டும் அல்லாது உலகம் முழுவதும், இந்த முறைகேடு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க், ஏற்கனவே பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில், இரண்டாவது முறையாக நேற்று முன்தினம், அமெரிக்க பாராளுமன்றில் மார்க் மன்னிப்பு கோரினார்.

அப்போது, மார்க் சக்கர்பர்க் எழுத்து மூலம் அளித்த மன்னிப்பு கடிதம், மக்கள் பிரதிநிதிகள் சபை குழுவால் வெளியிடப்பட்டது.

அதில் அவர் கூறியுள்ளதாவது பேஸ்புக் நிறுவனத்தை, நான் துவங்கினேன். அதை நடத்தி வருவதும் நானே. எனவே, பேஸ்புக் நிறுவனத்தில் நடக்கும் தவறுகளுக்கு நானே பொறுப்பாளி. பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்கள் முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், போதிய பாதுகாப்பு வசதிகளை நாங்கள் செய்யவில்லை என்பது, கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் மூலம் தெளிவாகி உள்ளது.

எனவே, கேம்பிரிட்ஜ் அனலிடிகா ஊழல் விவகாரத்துக்கு மன்னிப்பு கோருகிறேன். அது, மிகப்பெரும் தவறு. இவ்வாறு அவர் கூறியுள்ளார். கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தால், பேஸ்புக் நிறுவனர், மிகப்பெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்.

Related posts: