பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் துருக்கிக்கு விஜயம்!

Friday, September 30th, 2016

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜொன்ஸன் துருக்கிக்கான தனது முதலாவது உத்தியோகபுர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜொன்ஸன் லண்டன் மேயராக இருந்த போது துருக்கிய ஜனாதிபதி தாயீப் எர்டோகனை கடுமையாக விமர்சித்திருந்ததால் துருக்கிக்கும் – பிரித்தானியாவுக்கும் இடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

இதனால் பொரிஸ் ஜொன்சனின் இந்த விஜயம் குறித்து அனைத்துத் தரப்பினரதும் கவனம் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜொன்சன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு துருக்கிக்கு விஜயம் செய்துள்ளார்.

லண்டன் மேயராக பதவிவகித்த பொரிஸ் ஜொன்சன் கடந்த மே மாதம் துருக்கிய ஜனாதிபதி எர்டோகனை காட்டு ஆடு என மோசமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் திரேசா மே அவரை வெளிவிவகார அமைச்சராக நியமித்தார்.

இதனால் துருக்கிக்கும் – பிரித்தானியாவுக்கும் இடையிலான முரண்பாடுகள் மேலும் தீவிரமடைந்திருந்தன. எனினும் ஜொன்சனின் கடந்தகால கருத்துக்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என துருக்கி கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மீண்டும் ஒருமுறை பொரிஸ் ஜொன்சன் துருக்கி ஜனாதிபதியை விமர்சித்தால் நிலமை மோசமடையும் என எச்சரித்துள்ள நிலையிலேயே அவரது துருக்கி விஜயம் இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரித்தானியா தீர்மானித்துள்ள நிலையில் துருக்கிக்கும் – பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் இந்த விஜயத்தின் போது அதிக கவனம்செலுத்தப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பிரித்தானியாவே துருக்கியின் உற்பத்திப் பொருட்களுக்கு அதிக சந்தை வாய்ப்பை வழங்கி வருவதாக தெரிவித்த துருக்கி அரசின் ஐரோப்பிய விவகாரத்திற்கான அமைச்சர் ஒமர் ஷெலிக் ஜொன்சனின் இந்த விஜயத்தின் போது இது குறித்தே முக்கியமாக ஆராயப்படும் என்று தெரிவித்தார்.

Boris Johnson in Brussels to meet EU counterparts

Related posts: