சீனாவின் புதிய ஏவுகணை!

Tuesday, May 17th, 2016

சீனாவின் புதிய ஏவுகணை 5,500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது என்பதால், குவாம் தீவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா சொந்தம் கொண் டாடும் சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதிக்கு அருகே அமெரிக்க கடற்படை கப்பல் சென்றது. இது இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சீனாவின் டிஎப்-26 என்ற ஏவுகணையின் அபாயம் குறித்த அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்ற குழு வெளியிட்டுள்ளது.

அமெரிக்க-சீன பொருளா தாரம் மற்றும் பாதுகாப்பு மறு ஆய்வு ஆணையம் என்ற பெயரில் இயங்கும் இந்தக் குழுவின் அறிக்கையில், “சீனாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடை பெற்ற ராணுவ அணிவகுப்பில் இடம்பெற்ற டிஎப்-26 ஏவுகணை அமெரிக்காவுக்கு சொந்தமான ‘குவாம்’ தீவை அழிக்கும் திறன் கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த ஏவுகணையால் பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் தீவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்துக்கும் அப்பகுதி யின் ஸ்திரத்தன்மைக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள் ளது” என கூறப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கிலிருந்து 4,023 கி.மீ. தொலைவில் உள்ள குவாம் தீவில் சுமார் 6,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: