பருவநிலை மாற்றத்தை தடுக்க 100கோடி டொலர் – 196 நாடுகள் நேற்று கூட்டுப் பிரகடனம்!

Saturday, November 19th, 2016
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இதற்குத் தேவையான 10ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களைத் திரட்டித்தரவும் ஜ.நா.சபையில் அங்கம் வகிக்கும் 196 நாடுகள் நேற்று கூட்டுப்பிரகடனம் செய்துள்ளன.
புவி வெப்பமடைவதால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடைபெற்ற ஜ.நா.பருவநிலை மாநாட்டில் 195 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை சமாளிக்க, வளரும் மற்றும் ஏழை வாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் 10 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களை நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்ப நிலவியது. இந்நிலையில் இறுதிவரை பிரகடனமாக அறிவிக்க 196 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் 22ஆவது மாநாடு மொராக்கோவில் உள்ள மராக்கேஷ் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது, புவி வெப்பமயமாதலை எதிர்கொள்ள முன்னெடுக்க வேண்டிய அவசர கடமை என்ற தலைப்பில் 196 நாடுகளின் சம்மதத்துடன் நடவடிக்கை நிறைவேற்றப்பட்டது.

image-1

Related posts: