அற்பமான குற்றச்சாட்டுக்களின் பேரில் ரணில் கைது – இந்தியாவில் இருந்து வந்த அறிவுரை!.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது கவலையளிப்பதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையினுடைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அற்பமான குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்
இது மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய இலங்கை அரசாங்கம் பழிவாங்கும் அரசியலைக் கைவிட்டு அவரைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் சசி தரூர் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
000
Related posts:
40 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாக இணைக்கத் திட்டம் -கல்வி அமைச்சர் !
உயரம் குறைந்தமையினால் தாதியர் சேவையில் இணைந்து கொள்ள முடியாத பரிதாபம்!
கடற்படையினரின் காவலில் இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்!
|
|