மரபுரிமை மையங்களை பாதுகாத்தல்; ‘14 இல் ஈ.பி.டி.பி நிறைவேற்றிய தீர்மானத்தை ’20 இல் மீளக்கொண்டுவந்தது மாநகரசபை!

Wednesday, July 1st, 2020

யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் காணப்படும் மரபுரிமை மையங்களை பாதுகாப்பபு தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயககக் கட்சியியினால் 2014 ஆம் ஆண்டு கொண்டவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட மரபுரிமைக் கழகத்மை மையமாகக் கொண்டு குழுவை அமைத்து செயற்படுத்த வேண்டும்’ என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரரசபை உறுப்பினரான இரா. செல்வவடிவேல் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய முன்னணியினரால் கொண்டு வரப்பட்ட மரபுரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

யாழ் மாநகரசபையை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆழுகை செய்த 2014 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அன்றைய முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் குறித்த மரபுரிமைக் குழு உருவாக்கப்பட்டது.

இக்குழுவில் இரா. செல்வவடிவேல் ஆகிய நான் செயலாளராக இருந்து செயற்படுத்தியதுடன் அக்காலப்பகுதியில் மந்திரிமலை, யமுனாஏரி, யாழ் கோட்டை, நாயன்மார்கட்டு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்ந்து பல தகவல்களை திரட்டி அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் 2014 ஆம் ஆண்டு சபையின் அனுமதியுடன் அமைக்கப்பட்ட ஒரு விடயத்திற்கு மிண்டும் அனுமதி கோருவதில் பயனில்லை என சுட்டிக்காட்டிய இரா செல்வவடிவேல், குறித்த 2014 ஆம் ஆண்டின் குழுவை அடிப்படையாக கொண்டு புதிய செயற்குழவை அமைத்து மரபுரிமை மையங்களை பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சிறந்தது.

எமது பிரதேசங்களின் மரபுரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கப்போவதில்லை. அதை அமைப்பு ரீதியாக செயற்படும் போதே பலதரப்பட்ட உதவிகளையும் பெற்று சிறப்பாக முன்கொண்டு செல்ல முடியும் என்’றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: