உயரம் குறைந்தமையினால் தாதியர்  சேவையில் இணைந்து கொள்ள முடியாத பரிதாபம்!

Saturday, October 20th, 2018

சில சென்றி மீற்றர்கள் உயரம் குறைந்த காரணத்தினால் ஒரு தொகுதி விண்ணப்பதாரிகளை இலங்கை தாதியர் சேவையில் இணைந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கை தாதியர் சேவையில் இணைந்து கொள்வதற்காக விண்ணப்பம் செய்த 121 பேருக்கு போதியளவு உயரம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இவர்களை தாதியர் சேவையில் இணைத்துக் கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பதாரிகளுக்கு சலுகை வழங்குவது குறித்து சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கவனம் செலுத்தி வருகின்றார்.

இலங்கையில் தாதியர் சேவையில் இணைந்து கொள்வதற்கு 147.3 சென்றிமீற்றர் உயரம் இருக்க வேண்டியது அவசியமானது.

குறித்த விண்ணப்பதாரிகள் இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் சுகாதார அமைச்சர், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, விண்ணப்பதாரிகளின் குறைந்தபட்ச உயரத்தை 145 சென்றி மீற்றராக நிர்ணயிக்குமாறு அரச சேவை ஆணைக்குழுவிடம், சுகாதார அமைச்சு கோரியுள்ளது

Related posts: