ஏப்ரல் 01 முதல் முச்சக்கர வண்டி தொடர்பான சட்டதிட்டங்கள் அமுலுக்கு வரும்!

Saturday, January 28th, 2017

வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த போதிலும், அது அமுல்படுத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டிருக்காதிருந்த முச்சக்கர வண்டிகள் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டதிட்டங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் அந்த புதிய சட்டதிட்டங்கள் அமுலுக்கு வரும் என்று தற்போது அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பயணிகள் போக்குவரத்துக்கு பயன்டுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் மீட்டர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் சாரதி ஆசனத்திற்கு பின்புறமாக வாகனத்தின் பதிவிலக்கம், சாரதியின் பெயர், சாரதியின் புகைப்படம் என்பன காட்சிப்படுத்தப்பட வேண்டும்.  அத்துடன் பயணிகள் போக்குவரத்தின் போது குறுகிய வீதிகளினூடாக பயணிப்பதற்கு சாரதி கடமைப்பட்டுள்ளார் என்றும் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

1795861405Three

Related posts: