யாழ்ப்பாணத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!
Wednesday, June 8th, 2022
யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை விலை கூட்டி மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை விற்பனை செய்யாது சேமித்து வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை யினரால் இன்றைய தினம் யாழ் குடாநாட்டில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது
யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இணப்பாளர் விஜிதரன் அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ் குடாநாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டதோடு எரிபொருள் விற்பனை நிலையங்களின் எரிபொருள் கொள்கலன்களும் கண்காணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எமது இளைம் சமூதாயம் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கான ஆணி வேர் கண்டறியப்பட வேண்டும் : மல்லாகம் ம...
இம்மாதம் ஜனாதிபதி ரஷ்யாவிற்கு விஜயம் !
புலிகளுடனான யுத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு இலங்கையிடம் ஆப்கானிஸ்தான் கோரிக்கை!
|
|
|


