நேற்றுமுதல் அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு!
Friday, July 26th, 2019
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான 2500 ரூபா கொடுப்பனவு நேற்றுமுதல் மாதாந்த சம்பளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்திருக்கிருக்கின்றது.
இந்த சம்பள அதிகரிப்புக்கென அரசாங்கம் 2700 மில்லியனுக்கும் அதிகமான நிதியை செலவிட்டிருக்கிறது.
2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 107 சதவீதத்தால் அதிகரிக்கும்.
இது ஜூலை மாதம் முதல் அமுலாகும். அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கும் ஓய்வூதிய கொடுப்பனவுக்கும் ஆயிரம் பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் மலேரியா தடுப்பூசியை ஏற்றுங்கள் - வைத்திய கலாநிதி ஜெயக்குமரன்!
19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று பாதிப்பு அதிகரித்து - தேசிய எய்ட்ஸ் கட்டுப்ப...
இலங்கையில் கொரோனாவால் மேலும் 215 உயிரிழப்புகள் பதிவு - சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவ...
|
|
|


