யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள – தமிழ் மாணவர் குழுக்களுக்கிடையில் முறுகல்: பலருக்குக் காயம் !

Saturday, July 16th, 2016

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (16) காலை சிங்கள – தமிழ் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுகள் இன்று காலை விஞ்ஞானபீட வளாகத்தில் இடம்பெற்றன.  தமிழர் பாரம்பரிய முறையான மேள தாளத்துடன் மாணவர்கள் வரவேற்கப்படுவது வழமை. இந்த நிலையில் இன்றைய தினம் தமிழ் மாணவர்களால் மேள, தாளக் கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் சிங்கள மாணவர்கள் கண்டிய நடனக் கலைஞர்களை அழைத்துள்ளனர். பெரும்பான்மையினத்தவர்களான சிங்கள மக்களின் பாரம்பரிய நடனமான கண்டிய நடனத்துடன் சிங்கள மாணவர்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வால் இரு மாணவ குழுக்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் பின்னர் கைகலப்பாக மாறியது.

இதன்போது பொல்லுகள், தடிகள் சகிதம் சிங்கள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ஊடகவியலாளர் அங்கு சென்ற போதிலும் அவர்களையும் அச்சுறுத்தி மாணவர்கள் விரட்டியடித்துள்ளனர். இதனையடுத்துப் பல்கலைக் கழக வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

bc617d73-44c5-4f6b-adbf-6ee35947147a

c33daeba-3ff3-4fda-993a-1d407391408f

 

Related posts: