வடக்கின் சுகாதார அமைச்சு பாராமுகம்: நெடுந்தீவு பிரதேச நோயாளர்கள் அவதி!

Thursday, August 17th, 2017

நெடுந்தீவு வைத்தியசாலையில் எதிர்கொள்ளப்படும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு அங்கள்ள மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுடுள்ளது.

குறித்த தீவில் வாழும் சுமார் 5000 இற்கும் மேற்பட்ட மக்கள் தமது  மருத்துவ தேவைகளை பூரத்தி செய்து கொள்வதில் நாளாந்தம் பல்வேறுவகையான அசைளகரியங்களை அனுபவித்து வருவதாகவும் இதனை வடக்கு மாகாணசபையோ அன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ  அக்கறை செலத்துவமாக தெரியவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது –

யாழ்ப்பாணத்துடனான தரைப் போக்குவரத்தற்ற பகுதியான நெடுந்தீவு பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கான வளங்களை ஏற்படுத்துவதில் வட மாகாண சுகாதார அமைச்சு பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுவருவதாக தெரிவித்ததுடன் கடந்த வாரம் முதல் வைத்தியர்கள் எவரும் குறித்த வைத்தியசாலையில் இல்லாத நிலையில் குறித்த வைத்தியசாலை காணப்பட்டுவருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மகப்பேற்றுவிடுதி மற்றும் ஏனைய கட்டடங்களும் மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றன. ன் சாதாரண மருத்துவ உபகரணங்கள் கூட இல்லாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் மக்கள் தமது மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்வதாயினும் நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவானுக்குப் படகில் சென்று அதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்குச் செல்ல வேண்டும்.ஒரு சாதாரண நோய்க்கு மருந்து எடுப்பதற்காக சுமார் மூன்று நான்கு மணித்தியாலயங்கள் பயணம் செய்து மருத்துவத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது எனவும் மக்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

Related posts: