19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று பாதிப்பு அதிகரித்து – தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் எச்சரிக்கை!

Sunday, August 30th, 2020

இலங்கையில் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் டாக்டர் ரசஞ்சலி ஹெட்டியாராச்சி எச்சரித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் கிளினிக்குகளிலிருந்து கண்டறியும் சோதனைத் தரவுகளின் படி இந்த மோசமான நிலை சமீபத்திய காலங்களில் படிப்படியாக அதிகரிப்பதாக நேற்று நடைபெற்ற ஒரு மாநாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஞ்ஞான கணிப்புகளின்படி, 2020 ஆம் ஆண்டளவில், நாட்டில் 3600 எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக தேசிய எஸ்.டி.டி மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கிளினிக்குகளில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் தற்போது 2,000 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

மீதமுள்ள 1600 பேர் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று தெரியாமல் சமூகத்தில் மற்றவர்களுடன் தொடர்பில் உள்ளனர்.

இதனால் ஆரோக்கியமான மக்களும் அவர்களால் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே அனைவரையும் தங்கள் நிறுவனத்தின் கிளினிக்குகளுக்கு வந்து இலவச இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு டாக்டர் ராசஞ்சலி ஹெட்டியாராச்சி கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: