அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய உத்தரவு – நிர்வாக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே பணி நீக்கம் எனவும் தகவல்!
Saturday, July 12th, 2025
அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக, கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறையில் உள்ள 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அமெரிக்காவில் உள்நாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த 1,107 பணியாளர்கள், வெளிநாட்டு பணிகளை மேற்கொண்டு வந்த 246 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிர்வாக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே இவர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
00
Related posts:
அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய இணையத்தளம்!
இலங்கையில் உற்பத்தியாகிறது மின்சார முச்சக்கர வாகனம்!
இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தலாம் என்ற கரிசனை க...
|
|
|


