இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தலாம் என்ற கரிசனை காரணமாகவே இந்தியா அழைத்தது – ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவிப்பு!

Thursday, February 15th, 2024

இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தலாம் என்ற கரிசனை காரணமாகவே இந்தியா தன்னை அழைத்தது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு தான் அழைக்கப்பட்டமைக்கான காரணம் எதுவாகயிருக்கலாம் என்பதை தெரிவித்துள்ள ஜேவிபி தலைவர் தேசியபாதுகாப்பு  பொறுப்புணர்வுமிக்க பூகோள அரசியல் ஆகியவற்றிற்கான ஜேவிபியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா தனது கட்சியை அழைத்தமைக்கான காரணம் என்னவாகயிருக்கலாம் என்பது குறித்து கருத்துதெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க இலங்கையின் தற்போது காணப்படும் நிலைமை காரணமாகவே இந்தியா தன்னை அழைத்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜேவிபியை இந்தியா அழைத்ததை பாரம்பரிய செயற்பாடுகளில் இருந்து ஒரு மாற்றம் என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் புவிசார்அரசியல் நலன்களிற்கு எதிராக இலங்கை பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கைஅரசியலை உன்னிப்பாக அவதானிக்கின்றது என ஜேவிபி தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி துருவமயப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பில்லை என தெரிவித்துள்ள அவர் மக்களின் தேவைகளிற்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளை எந்த தேசத்துடனும்இணைந்துசெயற்படுவதற் ஜேவிபி தயாராகவுள்ளது எனவும் தெரிவிததுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும்; வரலாற்றுரீதியாகமுரண்பாடுகள் காணப்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள ஜேவிபியின் தலைவர் நாடுகளும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளும் குறிப்பிடத்தக்க மாற்றமடைந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மறைப்பதற்கு எதுவும் இல்லை என தெரிவித்துள்ள அவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு எதிராகஇலங்கையின் தேசிய பாதுகாப்பே இந்தியாவின் கரிசனைக்குரிய விடயம் எனவும்தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விஸ்தரிப்புவாதம் குறித்து எந்த அச்சமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: