அரச உயர் அதிகாரிகள் சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு!
Tuesday, June 30th, 2026
..
அரச உயர் அதிகாரிகள் தமது சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (30) முடிவடைவதாக கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த காலக்கெடுவிற்குள் பிரகடனங்களைச் சமர்ப்பிக்க தவறும் அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
எனவே சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்கள் அனைத்தையும் உத்தியோகபூர்வ இணையதளமான https://ald.ciaboc.gov.lk/ என்ற இணையதளத்தின் ஊடாக சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகு சொத்துப் பிரகடனங்களைச் சமர்ப்பிக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
000
Related posts:
பூர்வீக இடத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தி இரணைதீவு மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
அமெரிக்க குடிவரவு குடியகல்வு கொள்கையில் மாற்றம்!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!
|
|
|


