முதல் பெண் நடுவர்!

Tuesday, October 17th, 2017

பிபா ரு-17 ஆண்கள் கால்பந்து போட்டியில் முதல் பெண் நடுவராக பணியாற்றி ஸ்விட்சர்லாந்தின் எஸ்தர் ஸ்டப்லி சாதனை படைத்துள்ளார்.

பிபா ரு-17 ஆண்கள் கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் உள்ள விவேகானந்த யூபா பாரதி கரான்கன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இதில் ஜப்பான் மற்றும் நியூ கலிடோனியா அணிகள் மோதின.

இந்த விளையாட்டின் போது முதல் முறையாக எஸ்தர் ஸ்டப்லி நடுவராக இருந்தார். ஆண்கள் கால்பந்து போட்டியில் பெண் நடுவராக இருந்தது இதுவே முதல் முறையாகும்.

ஸ்டப்லி பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். அவர் நடுவராக களம் இறங்கிய இந்த ஆட்டமானது 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. இந்த தொடருக்கு 7 பெண் நடுவர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் 7 பேருக்கும் பிபாவில் பணியாற்றும் அனைவருக்கும் கால்பந்து குறித்து செய்முறை வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து எஸ்தர் பேசுகையில் ‘‘ஆண்கள் கால்பந்து போட்டியில் நடுவராக பணியாற்றியது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

ஆனால் சாதரணமான போட்டியாக நினைத்து நான் பணியாற்றினேன். இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஆண்கள் போட்டியில் நடுவராக இருந்ததில் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை’’ என அவர் கூறினார்.

Related posts: