சார்க் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான சுகநலபாதுகாப்பு மாநாடு கொழும்பில்!

Saturday, September 9th, 2017

தெற்காசிய நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் SACOSAN அமைப்பின் 10வது சார்க் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான சுகநலபாதுகாப்பு மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது.

பம்பலப்பிட்டி ஓசோ ஹோட்டலில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 12ம் திகதி வரை இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டள்ளது.

சுகநல பாதுகாப்பு தொடர்பான இலக்குகளை எட்டல் என்னும் தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுவுள்ளது. இந்த மாநாட்டில் ஜனாதிபதியின் செயலாளர் முக்கிய உரையாற்றவுள்ளார்.

2008ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 3வது தெற்காசிய மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடன செயற்பாட்டின் முன்னேற்றங்களை ஆராய்தல். சுகநலபாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சிநிரலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக பிராந்தியத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் மேற்கொள்ளப்படும் அரசியல் ரீதியிலான உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்துதல். சுகநல பாதுகாப்பிற்காக ஒவ்வொரு நாடுகளுக்கும் முக்கியமான மற்றும் பிராந்திய கட்டமைப்பு ரீதியில் பகிந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த மாநாட்டின் போது ஆராயப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.இம்மாநாடு அடுத்தவருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் திறந்த வெளியில் மலம்கழித்தல் தற்போது குறைவடைந்து 1.4சதவீதமாக காணப்படுகின்றது. இதனை 2020 ஆம் ஆண்டளவில் முழுமையாக இல்லாதொழித்து மலசலகூட வசதிகளை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.பாடசாலைகளில் குறிப்பாக மாணவிகளுக்கான இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வரவுசெலவுத்திட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும்  அமைச்சர் மேலும்குறிப்பிட்டார்.

Related posts: