சண்டிலிப்பாய் இந்து கிண்ணத்தைத் தனதாக்கியது!
Friday, March 9th, 2018
வலிகாமம் கல்விவலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 20 வயதுப் பெண்கள் பிரிவில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.
உடுவில் மகளிர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதின.
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி 17:16 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியாட்டத்திலும் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியின் ஆதிக்கம் தொடர ஆட்ட நேர முடிவில் அந்த அணி 31:28 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.
Related posts:
இலங்கை - சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளின் பாதுகாப்பில் சிக்கல்!
05 விக்கெட்டுக்களால் இந்திய அணி வெற்றி!
இந்தியன் ப்ரீமியர் லீக் - இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி!
|
|
|


