சுஸ்விஸ் மலையேற்ற வீரர் யூலி ஸ்டெக் விபத்தில் மரணம்!

Monday, May 1st, 2017

சுவிஸ் நாட்டை சேர்ந்த யுலி ஸ்டெக் எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்த்தாக நேபாள சுற்றுலா அலுவலகம் அறிவித்துள்ளது.

“ஸ்விஸ் மெஷின்” என்று அழைக்கப்படும் ஸ்டெக், எவரெஸ்ட் சிகரத்தை புதிய வழியில், ஆக்ஸிஜன் இல்லாமல் அடைய பயணம் மேற்கொண்ட முயற்சியில் உயிரிழந்தார்.

நாற்பது வயதான ஸ்டெக், துரிதமாக மலையேறும் திறமைக்காக பல்வேறு விருதுகளை பெற்றவர்.

இமயமலையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அவரது சடலம் காட்மண்டுவுக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

“கீழ் முகாமில் இருந்து 7000 மீட்டர் சென்றுவிட்டு விரைவாக திரும்பிய ஒரு விரைவான நாள்” என்று புதன்கிழமையன்று ஸ்டெக் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். “உயரமான இடத்திற்கு பயணப்படுவதற்கு, காலநிலைக்கு இணக்கமாவது தான் சிறந்த வழி” என்று அவர் நம்பினார்.

ஆக்ஸிஜன் இல்லாமல் 2012-ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டிய ஸ்டெக், 2015 ஆம் ஆண்டில், வெறும் 62 நாட்களில் மொத்தம் 4,000 மீட்டர் (13,100 அடி) கொண்ட அனைத்து 82 ஆல்ப்ஸ் சிகரங்களின் உச்சங்களை எட்டி சாதனை புரிந்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உலகிலேயே மிக உயரமான மலையில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, உள்ளூர் மலையேற்ற வீர்ர்களான ஷெர்பாக்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக, எவரெஸ்ட் மற்றும் லோட்ஸே சிகரங்களைத் தொடும் முயற்சியை அவர் கைவிட நேர்ந்தது.

“உண்மையான உத்வேகம்” கொடுப்பவர் என்று புகழாரம் சூட்டும் பிரிட்டிஷ் மலையேறும் வீர்ர் கென்டன் கூல், “மலைகள் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள சாத்தியமான அனைத்தையும் எங்களுக்குக் காட்டியவர் யுலி ஸ்டெக்” என்று கூறுகிறார்.

“பிரபல மலையேறும் வீர்ரான ஸ்டெக், சிறந்த ஆல்-ரவுண்டர்” என்று பிரிட்டிஷ் மலையேற்ற கவுன்சில் வர்ணிக்கிறது.

ஆல்ப்ஸ் மலையில் ஏறுவதற்கு புதிய தரங்களை நிர்ணயித்த யுலி ஸ்டெக், சிறந்த வழிகளில், ஆச்சரியப்படுத்தும் வகையில் விரைவாக தனியாக தொடர் சாதனைகளை படைத்தார்.

ஸ்டெக்கின் சாதனைகள் பற்றிய காவியமான திரைப்படங்கள் அனைவரையும் கவர்ந்த்து என்பதுடன், மலையேற்றத்தில் புதிய பார்வையாளர்களை ஈர்ப்பதில் யூலி ஸ்டெக் முக்கிய பங்கு வகித்தார்.

தனது திட்டமிட்ட அணுகுமுறை மற்றும் மனிதன் செய்யக்கூடிய உழைப்பு வரம்பையும் தாண்டி, செயலில் ஈடுபடுத்திக் கொள்ளும் கடின உழைப்பு ஆகியவற்றால் யுலி ஸ்டெக் “ஸ்விஸ் மெஷின்” என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்.

2015-ஆம் ஆண்டில் உலகின் மிக பிரபலமான சுவர்களில் ஒன்றான, ஈகிரின் வடக்கு முகத்தை, இரண்டு மணி நேரம் 47 நிமிடங்களில் சென்றடைந்தார். மலையேற்ற முயற்சிகளில், தொடக்க நிலையில் இருக்கும் வீர்ர்களுக்கு இதற்கு பல நாட்கள் ஆகும் நிலையில், இந்த சாதனையை அவர்களால் நினைத்துக் கூட பார்க்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: