சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இருவருக்கு கொரோனா – தூதரக சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானம்!

Thursday, October 22nd, 2020

இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளுமெண்டல் மற்றும் கிரேண்பாஸ் ஆகிய காவல்துறை அதிகார பிரதேசங்களில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பகுதிகளில் அமுலாகியுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை தொடம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை காவல்துறை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில ஊரடங்கு சட்டத்தை மீறிய 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதற்கமைய ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 596 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 76 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தூதரக சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய மறு அறிவித்தல் வரையில் ஏற்றுமதி ஆவணங்களை சான்றழிப்பதற்காக அந்த பிரிவிற்கும் பிரேவேசிக்கும் ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு சேவைகள் இடம்பெறாது என அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரதேச தூதரக அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

அதேநேரம் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் இறப்புக்கள் மற்றும் இறப்பு தொடர்பான ஆவண உதவிகள் சார்ந்த கோரிக்கைகளுக்காக தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 0776032252, 0773586433, 0718415623 மற்றும் 0701428246 ஆகிய இலஙக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: