கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த நான்கு அமைச்சர்களைக் கொண்ட குழு – அமைச்சர் டக்ளஸ் தகவல்!

Sunday, November 1st, 2020

கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டு மக்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக 4 அமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்..

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொட்டர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்  – இலங்கையில் கொரோனாவின் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்பதற்காக அரசாங்கம் கிராமிய பொருளாதாரத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலம் மக்களை பட்டினிச் சாவிலிருந்து மீட்பதற்காக கிராமிய பொருளாதார திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 4 அமைச்சர்கள் தலைமையில் ராஜாங்க அமைச்சர்களையும் உள்ளடக்கிய குழு வேலைத் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதுமட்டுமல்லாது கொரோனா காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மூடப்பட்ட தொழிற்சாலைகள் விரைவில் திறக்கப்பட உள்ளதோடு யாழ்ப்பாணத்தில் நண்டு ஏற்றுமதி   இன்றிலிருந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படவுள்ளது.

தற்போதைய அரசாங்கம் முதலாவது கொரோனா அலையை வெற்றிகரமாகமுடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் மக்களின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் இரண்டாம் மூன்றாம் அலைகள் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் என்ற வகையில் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக பல்வேறு சுகாதார நடைமுறைகளை செயற்படுத்திவரும் நிலையில் மக்களும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: