செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000

கௌரவ சபாநாயகர் அவர்களே!

பிரேமச்சந்திரன் அவர்கள் சொன்னது உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர் கடத்தப்பட்டிருந்தால் இது பற்றிக் கவனித்துப் பார்க்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை. ஆனால் அதற்குப் பின்னாலும் முன்னாலும் அவரால் சொல்லப்பட்ட விடயங்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை.

எந்த வகையிலும் இதை இந்த வாக்கெடுப்போடு சம்பந்தப்படுத்திப் பார்க்க முடியாது.ஏனென்று சொன்னால் அவர்கள் எல்லாம் இங்கு கொழும்பில் தான் இருக்கின்றார்கள். அவர்கள் கள்ள வோட்டு போட்டு இங்கு வந்திருக்லாம்.(இடையீடு) ஆனால் அவர்களில் பலர் வெளிநாடுகளில் இருந்தவர்கள். புலிகளுடைய இராணுவப் பேச்சாளர் இளந்திரயன் இவர்கள் எல்லோரும் இன்று பாராளுமன்றில் சமூகமளிக்காவிட்டால் அவர்களுடைய உயிர்களுக்க எந்தவிதமான உத்தரவாதமும் கொடுக்க முடியாது என்றும் கடுமையான உத்தரவாதத்தை பிறப்பித்திருக்கின்றார்.

அந்த வகையில்தான் அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.(இடையீடு) அவர்கள் இன்றைய வாக்கெடுப்பில் வரவு – செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கின்றார்களோ இல்லையோ அரசாங்கத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை.(இடையீடு) அவர்கள் வாக்களிக்கலாம் அல்லது வாக்களிக்காமல் விடலாம்.(இடையீடு)

அங்கு நீங்கள் போனால் மக்கள் உங்களை அடித்துத் துரத்துவார்கள்.அவர் கடத்தப்பட்டது. உண்மையாக இருந்தால் அதை அரசாங்கம் சட்டம் ஒழுங்குடன் சம்பந்;தப்பட்ட ஒரு பிரச்சினையாகப் பார்த்து கவனிக்க வேண்டும். எனவே அந்தச் சம்பவத்திற்கும் இந்த வாக்கெடுப்பிற்கும் முடிச்சுப் போடுவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கம் முடிச்சுப் போடுவதாகவே இருக்கும் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

20 மே 2000

Related posts: