ஒரே நாளில் 60 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று: இலங்கையின் நிலைமை தொடர்பில் எச்சரிக்கும் சுகாதாரத் தரப்பு!
Tuesday, April 28th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுடன் இலங்கையில் நேற்றும்மட்டும் 65 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இலங்கையில் ஒரே நாளில் பதிவாக அதிக எண்ணிக்கையாகும்.
நேற்றைய தினம் 63 கொரோனா நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். இந்நிலையில், நேற்றும், இன்றுமாக 128 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இது வரையில் 588 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 455 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், 3,051,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 210,714 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு அஞ்ச...
காப்புறுதி நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் - டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
தாய்மை அடைந்திருந்த போது அவசரமாக வரச் சொன்னார் ஜெயலலிதா - உறவினர் லலிதா!
|
|
|


