25 மாவட்டங்களிலும் விசேட முகாம்கள் அமைக்க அமைச்சரவை அனுமதி!

Thursday, July 6th, 2017

அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்படுகின்ற மக்களை தங்க வைப்பதற்கான தற்காலிக விசேட முகாம்கள் 25 மாவட்டங்களிலும் அமைக்கப்படவுள்ளன.இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அவசர அனர்த்த நிலைமைகள் தொடர்பில் முழுமையான அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட உடன், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பிரதேச மக்களை தங்க வைப்பதற்காக இந்த முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவை இணை பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.அதன்படி, 2017ஆம் – 2018ஆம் ஆண்டு கால எல்லைக்குள் நாடளாவிய ரீதியாக 100 விசேட தற்காலிக முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Related posts:


இலங்கை நெருக்கடியில் இருந்து மீள இறுக்கமான நாணய கொள்கை, வரி அதிகரிப்பு நெகிழ்வுடனான நாணயமாற்று அவசிய...
கடன் வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் முக்கிய பேச்சுவார்த்தை - நிதி இராஜாங்க அமைச்சர் செ...
போக்குவரத்து அமைச்சின் நிறுவனங்களில் ஊழல், மோசடி இடம்பெறுமாயின் பாரபட்சமற்ற நடவடிக்கை - அமைச்சர் பந்...