கடன் வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் முக்கிய பேச்சுவார்த்தை – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரவிப்பு!

Friday, November 4th, 2022

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடனான விசேட பேச்சுவார்த்தையொன்று நேற்றையதினம் சூம் தொழில்நுட்பம் மூலம் நடைபெற்றதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொண்டுள்ள கடன்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடன் அரசாங்கத்தின் உயரதிகாரிகள் சூம் தொழில்நுட்பமூடாக மேற்படி பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருந்ததாகவும் குறிப்பிட்ட அவர், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றுக்கொள்வதற்காக அதன் பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கையானது கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வது அவசியமாகவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க கடன் வழங்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடன்களை மறுசீரமைப்பு செய்வதில் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் இதற்கு முன்னரும் அதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: