நிவாரண உதவிகளுக்கு 22.7 மில்லியன் டொலர்கள் தேவை!

Saturday, June 17th, 2017

அனர்ந்த நிலையால் சேதமடைந்துள்ள பாடசாலைகளை முன்னர் இருந்ததை விட நல்ல நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட மாத்தறை பிடபத்தர பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் இதனை தெரிவித்தார்.இதேவேளை, இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளுக்காக, 22.7 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார மற்றும் அவசர உதவிகள் பணிமனை இதனைத் தெரிவித்துள்ளதுஇதற்கான நிதி ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளிடம் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஇலங்கையில் நிலவிய மழையினையடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மணிசரிவு காரணமாக 212 பேர் பலியானதுடன், 6 லட்சம் பேர்வரையில் பாதிக்கப்பட்டிருந்தனர்மண்சரிவினால் பல வீதிகள் சேதமடைந்துள்ள நிலையில், பல இடங்களுக்கு தற்போதும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள  முடியாதநிலை ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில், பின்தங்கிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட சுமார் 3 லட்சம் மக்களுக்காக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருகின்றமை  குறிப்பிடத்தக்கது

Related posts: