நாடாளுமன்ற குழப்பநிலை தொடர்பில் ஆராய 7 பேர் கொண்ட குழு நியமனம்!
Friday, April 23rd, 2021
கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைமை தொடர்பில் கண்டறிவதற்காக சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த குழுவில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, இம்தியாஸ் பாக்கிர் மக்கார், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்?
கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் பழைய நாடாளுமன்றமாகவே இருக்கும் - அரசமைப்பின் பரிந்துரைகளைக் கருத்தில்கொண்ட...
ரவி செனவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி - உடனடியாக பதவி நீக்கவேண்டும் என உதய கம்மன்ப...
|
|
|


