கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் பழைய நாடாளுமன்றமாகவே இருக்கும் – அரசமைப்பின் பரிந்துரைகளைக் கருத்தில்கொண்டே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, April 30th, 2020


கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட – பழைய நாடாளுமன்றமாகவே இருக்கும். அரசமைப்பின் பரிந்துரைகளைக் கருத்தில்கொண்டே நான்கரை வருடங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக் கூட்ட வேண்டுமென எதிரணியிலுள்ள கட்சிகள் பல ஒன்றிணைந்து, ஜனாதிபதியிடம் கூட்டு யோசனையொன்றைக் கையளித்துள்ளன.
இதில், மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும், தமது மாதக் கொடுப்பனவுகள்கூட வேண்டாம் என்றும் உத்தரவாதமளித்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேலும் கூறறுகையில் –
எதிர்க்கட்சிகளின் மிரட்டல் கோரிக்கைக்கு அடிபணிந்து பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி தயாரில்லை. அதேவேளை, நாடாளுமன்றம் மீளக் கூட்டப்பட்டால் அரசு கவிழ்ந்துவிடும் என்ற அச்சமும் ஜனாதிபதிக்கு இல்லை. எதிரணியினர் அப்படி நினைப்பது படுமுட்டாள் தனமானது.
நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடக்கும் என்று இப்போது உறுதியாகக் கூற முடியாது. ஏனெனில், இந்த நாட்டிலிருந்து கொரோனா வைரஸை முற்றாக இல்லாதொழிப்பதே எமது நோக்கம். அதன்பின்னர்தான் தேர்தல் நடக்கும். அதன்பின்னர்தான் புதிய நாடாளுமன்றமும் கூடும்.
அதுவரைக்கும் இந்த நாட்டைக் கொண்டு நடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு எதிர்கட்சிகளின் தலைவர்கள் முன்வைத்துவரும் கோரிக்கை நியாயமானது என தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அதனை தாம் அனுமதிப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: