இலங்கை நெருக்கடியில் இருந்து மீள இறுக்கமான நாணய கொள்கை, வரி அதிகரிப்பு நெகிழ்வுடனான நாணயமாற்று அவசியம் – சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பதில் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, April 26th, 2022

இலங்கை நெருக்கடியில் இருந்து மீள இறுக்கமான நாணய கொள்கை, வரி அதிகரிப்பு மற்றும் நெகிழ்வுடனான நாணயமாற்று அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் அலி சப்ரி சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்காக வோஷிங்டன் சென்றுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பு இதுவரை முடிவடையாத நிலையில், அவை இன்னும் தொடர்ந்த வண்ணமுள்ளன.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கையும் கடன் மறுசீரமைப்பும் சீனாவுடனான இருதரப்பு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என இலங்கைக்கான சீனத் தூதுவர் நேற்று (25) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: