இனவாதம் இல்லாத இலங்கையினை எதிர்காலத்தில் உருவாக்கவேண்டும்:யாழில் ரணில் விக்கிரமசிங்க!

Saturday, September 17th, 2016

இனவாதம் இல்லாத இலங்கையினை எதிர்காலத்தில் உருவாக்கவேண்டும். அதனைத்  தான் அன்று ஜே .ஆர் ஜெயவர்த்தன  தெரிவித்திருந்தார். இதற்கான முயற்சிகளைத் தான் நாம் எடுத்துவருகின்றோம் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் பணிப்பின் பேரில் உள்நாட்டலுவல்கள் பொதுநிர்வாக அமைச்சின் நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். மாவட்டச் செயலகத்திற்கான புதிய நிர்வாக அலகுகளை உள்ளடக்கிய மூன்று மாடிக் கட்டடத் தொகுதியைத் திறந்துவைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை(17) முற்பகல் யாழ். மாவட்டச் செயலகத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.

3

இந்  நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குறித்த நிர்வாக அலகுத் தொகுதியை உத்தியோகபூர்வமாகத்  திறந்துவைத்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

தமிழ் மக்களின் மனங்களைப்  பழிவாங்கும் எண்ணம் எமக்கு இல்லை. அவர்களின் எதிர்பார்ப்புக்கள்,மற்றும் அபிலாசைகளை இனங்கண்டு அவர்களுக்கான உரிய தீர்வுகளைப்  பெற்றுக்கொடுப்பதே தற்போதைய எமது எண்ணமாக இருக்கிறது.

1

இந்த நாட்டில் உண்மையினை கண்டறியும் நல்லிணக்க ஆணைக ;குழுவினையும் உருவாக்கவும் முயற்சிகள் உருவாக்கப்பட்டு வருகின்றது.இதன் ஊடாக சிறந்த பலாபலன்களை மக்கள் பெற்றுக்கொள்ளமுடியும்

எனவே தான் ஐனாதிபதி அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் வாழும் மூவின மக்களின் பிரச்சினைக்குமான  தீர்வினைப்  பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்,

2

 

Related posts: