வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றது – பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபை!

Sunday, February 25th, 2018

அதிவேக பாதைகளில் பொருத்தப்பட்டுள்ள வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் விபத்துக்கள் பெருமளவில் தவிர்க்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.

தென்னிலங்கை அதிவேக பாதை, கட்டுநாயக்க அதிவேக பாதை உள்ளிட்ட அதிவேக பாதைகளில் தானியங்கி வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் அண்மையில் பொருத்தப்பட்டிருந்தன.

பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபையால்  மேற்கொண்டிருந்த குறித்த நடவடிக்கைக்கு சுமார் நூறு மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

குறித்த கருவிகள் பொருத்தப்பட்டதன் பின்னர் அதிவேக பாதையின் வேக எல்லையான மணித்தியாலத்திற்கு நூறு கிலோமீட்டர்கள் வேகத்திற்கு அதிகமாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளன.

இதன் காரணமாக அதிவேக பாதையின் விபத்துக்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம் இலங்கையில் சட்டத்தை மதிக்கும் சாரதிகளை உருவாக்க முடிந்துள்ளதாக பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts:

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான திரிபோஷாவை இந்த வாரத்திற்குள் வழங்குவதற...
இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென் ஆபிரிக்கா உதவும் – அந்நாட்டின் அமைச்சர் நலேடி பண்டோர் உ...
நுகர்வோர் அதிகார சபைக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நளின் ப...