வெளிநாடுகளின் உதவியுடன் இலங்கையில் மரவள்ளி மா தொழிற்சாலை!

Sunday, April 8th, 2018

மரவள்ளி உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் இலங்கையில் மரவள்ளி மா தயாரிக்கும் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு சுவீடன் மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.

குறித்த முதலீட்டாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவுதெரிவித்துள்ளது.

இந்தப் பயிர்ச் செய்கையை பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பிரபல்யப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கீழ் சுமார் 6 ஆயிரம்ஹெக்டயர் காணியில் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

மரவள்ளி பயிர்ச் செய்கையில் விவசாயிகளை ஈடுபடுத்தி, அவர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் மரவள்ளியை இந்த புதிய தொழிற்சாலையினூடாக மாவாக மாற்றி அதன் மூலம் சீனிஉற்பத்தியை மேற்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: