மொஸ்கோ பயங்கரவாத தாக்குதல் நடத்திய நான்கு துப்பாக்கிதாரிகளும் கைது – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவிப்பு!

Sunday, March 24th, 2024

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகர் பகுதியிலுள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய நான்கு துப்பாக்கிதாரிகளும் கைது செய்யப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் குறித்த கட்டடத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 133 பேர் கொல்லப்பட்டதுடன் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும், துப்பாக்கிதாரிகள் நான்கு பேரும் யுக்ரைனுக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது கைதானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் மொஸ்கோவில் கச்சேரிகள் உட்பட “பெரிய கூட்டங்கள்” மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்ததாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவை குறிப்பிட்டுள்ளது.

எனினும், ரஷ்ய அரசாங்கம், இது அமெரிக்கா தமது தேர்தலில் தலையிடுவதற்கான முயற்சி என்று குறித்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் நிராகரித்தது.

அதேநேரம், ரஷ்யா முழுவதும் திட்டமிடப்பட்டிருந்த வார இறுதி நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கடும் மழையுடனான கால நிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு ...
அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களே நாட்டுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படக் காரணம...
300க்கும் மேற்பட்டோரை கொன்ற குண்டுவெடிப்பின் பின்னனியில் இருந்த குற்றவாளிகளுக்கு தூக்கு!