தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்து!

Thursday, September 23rd, 2021

சர்வதேச பயணத்தை எளிதாக்கும் வகையில் அவர்களின் தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

உலகளாவிய கொரோனா தடுப்பு உச்சி மாநாட்டில் காணொலி மூலம் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் 95 நாடுகளுடனும், ஐ.நா அமைதிப் படையுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கும் போது அவற்றை பிற நாடுகளுக்கும் வழங்குவது மீண்டும் ஆரம்பமாகும்.

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிப்பதன் மூலம் சர்வதேச பயணம் எளிதாக்கப்பட வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: