காஷ்மீர் பிரச்னை தொடர்பில் இந்தியாவுடன் பேச்சு நடத்த தயார் – இம்ரான்!

Friday, July 27th, 2018

காஷ்மீர் பிரச்னை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாக்., பார்லிமென்ட் தேர்தலில், இம்ரான் கானின், பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், உதிரி கட்சிகளின் ஆதரவுடன், பிரதமர் பதவியை பிடிக்கும் முயற்சியில், இம்ரான் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இம்ரான் கான் தெரிவித்ததாவது: இந்த தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்கது. 22 ஆண்டு கால பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துள்ளது. இந்திய ஊடகங்கள், என்னை ஒரு பாலிவுட் பட வில்லன் போல சித்தரித்துவிட்டன; இதில் எனக்கு வருத்தம் உள்ளது.

காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு காண முடியும். இந்திய தலைமை அதை விரும்பினால், உடனடியாக பேச்சு நடத்த தயார். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண, இந்தியா ஒரு அடி முன்வைத்தால், நாங்கள், இரண்டு அடி முன்வைக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts: