ஹாங்காங்கில் போராட்டம் – 230 விமானங்கள் இரத்து!

Tuesday, August 6th, 2019

ஹாங்காங் நாட்டில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வார இறுதிநாட்களில் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் பேரணி நடத்தியும், அரசு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்டும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விமான நிலையங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர். இதனால் விமான நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு விமான சேவை முடங்கியதுடன், 230 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

போராட்டம் காரணமாக சாலை, ரெயில், விமானம் என அனைத்து வகையான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டதால் ஹாங்காங்கில் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: