மீண்டும் எரிமலை சீற்றம் –  பாலியில் விமான சேவை பாதிப்பு!

Sunday, July 1st, 2018

எரிமலை புகையை கக்கி வருவதால் வானில் சுமார் 2000 மீட்டர் சுற்றளவுக்கு புகை படர்ந்துள்ளமை காரணமாக நேற்று பாலியில் 450 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஒரு ஆபத்தான ஆகங் எரிமலை தற்போது மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

அதிவேகத்தில் புகையை கக்கி வரும் இந்த எரிமலை எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிமலையை சுற்றி உள்ள 4 கி.மீ. சுற்றளவுக்கு அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று அதிகாலை சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதுடன் 450 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பாலியை விட்டு வெளியேற முடியாமல் உள்ளனர்.

இதேவேளை பாலியின் சர்வதேச நுழைவு வாயிலும் நேற்று மாலை வரை மூடப்பட்டது. இதனால் சுமார் 75 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: