பயனாளிகளை தேர்வு செய்வதில் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவிப்பது அவசியம் – கிழக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து!

Thursday, June 23rd, 2022

மாகாண சபையினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கான பயனாளிகளைத் தெரிவு செய்வது மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் வலியுறுத்தியுள்ளார்.

இல்லையெனில், சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு செலவிடப்படும் பணம் வீணாகிவிடும். அதிகாரிகள் விசுவாசத்திற்காக பல்வேறு தெரிவுகளை மேற்கொள்வதாக முறைப்பாடுகள் இருப்பதாகவும் ஆளுநர் வலியுறுத்தினார்.

திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் (21) இடம்பெற்ற மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களின் விசேட சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் –

திட்டங்களுக்கு பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, அது வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறவில்லை என்று அரசியல் அதிகாரிகளிடம் இருந்து பெரிய குற்றச்சாட்டு உள்ளது.

எனவே, இனிமேலாவது பயனாளிகளை தேர்வு செய்வதில் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

ஏனெனில் அவர்கள் மக்கள் பிரதிநிதிகள். எனவே அவர்களும் எமது செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் இன்னும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும்.

பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும். அந்தக் குழுவின் பிரதிநிதிகளில் ஒருவராக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அமைப்பின் தலைவரை நியமிக்கவும். மக்கள் பிரதிநிதித்துவமும் உள்ளது. உள்ளூராட்சி அமைப்புகள்தான் அந்தப் பகுதி மக்களைப் பற்றிய புரிதல் கொண்டவர்கள் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: